செய்திகள்,திரையுலகம் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் கதை திருட்டு!…

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் கதை திருட்டு!…

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் கதை திருட்டு!… post thumbnail image
ஹாலிவுட்:-அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிவர இருக்கிறது 24வது ஜேம்ஸ் பாண்ட் படம் ‘ஸ்பெக்டர்’. இதில் கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சொலஸ், ஸ்கை பால் படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த டேனியல் க்ரேக் நடித்திருக்கிறார். படத்தின் பெயரைக்கூட சமீபத்தில்தான் அறிவித்தார்கள். ஸ்பெக்டர் என்பது சர்வதேச பயங்கரவாத கும்பல்.

இது பற்றி ஜேம்ஸ் பாண்டுக்கு தகவல் கிடைக்க அதனை அழிக்க புறப்படுகிறார். அப்போது ஜேம்ஸ் பாண்ட் பணியாற்றும் பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்.ஐ 6க்குள் அதிகாரிகளிடையே மோதல் வருகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு உளவு அமைப்பையே காலி செய்ய திட்டமிடுகிறது ஸ்பெக்டர். அதனை ஜேம்ஸ் பாண்ட் எப்படி தடுக்கிறார் என்பதுதான் கதையாம். இப்போது இந்த கதையும், அதன் திரைக்கதை வடிவமும் திருடப்பட்டு விட்டதாக பரபரப்பு தகவல் கிளம்பி உள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஜி.வில்சன், ஃபார்பரா பிராக்கோலி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் கம்ப்யூட்டர்களிலிருந்து பலர் தகவல்களை திருடி உள்ளனர். அதில் ஸ்பெக்டர் கதையும், திரைக்கதையும் ஒன்று. இந்த கதையை திருடியவர்கள் ஆன்லைனில் வெளியிட உள்ளதாக கருதுகிறோம். கதை பிரிட்டன் பதிப்புரிமை சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை வெளியிட்டால் வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி