செய்திகள் வால்ட் டிஸ்னியின் 87 ஆண்டுகளுக்கு முந்தைய கிறிஸ்துமஸ் குறும்படம்: நார்வேயில் கண்டுபிடிப்பு!…

வால்ட் டிஸ்னியின் 87 ஆண்டுகளுக்கு முந்தைய கிறிஸ்துமஸ் குறும்படம்: நார்வேயில் கண்டுபிடிப்பு!…

வால்ட் டிஸ்னியின் 87 ஆண்டுகளுக்கு முந்தைய கிறிஸ்துமஸ் குறும்படம்: நார்வேயில் கண்டுபிடிப்பு!… post thumbnail image
ஓஸ்லோ:-வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. குறிப்பாக மிக்கி மவுஸை நாம் நம் சிறு வயதில் பார்த்து ரசித்து மகிழ்ந்திருப்போம். 1927 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘எம்ப்டி சாக்ஸ்’ என்ற குறும்படம் அமெரிக்க பொழுதுபோக்கு ஜாம்பவான் வால்ட் டிஸ்னியின் முதல் கிறிஸ்துமஸ் குறும்படம் என்ற பெருமையுடையது. இந்த அரிய குறும்படம் நார்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள தேசிய நூலகத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை 25 நொடிகள் ஓடக்கூடிய ‘எம்ப்டி சாக்ஸ்’ படத்தின் பிரதி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 ரீல்கள் கொண்ட பிரதி, 5 நிமிடம் 30 நொடிகள் ஓடக்கூடியது என்ற ஆச்சரியம் தகவல் வெளிவந்துள்ளது. இது டிஸ்னி கார்ட்டூனிஸ்ட் டேவிட் கெர்ஸ்டீனுடையது என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தப் படச்சுருளை டிஜிட்டல் செய்து அதன் ஒரு பிரதியை வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு அனுப்ப இருப்பதாக தேசிய நூலகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி