சென்னை:-ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள ‘லிங்கா’ படம் உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் நேற்று ரிலீசானது. தமிழ்நாட்டில் 700–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தெலுங்கிலும் ரிலீசானது. ஒரு வாரத்துக்கு எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.
தமிழ், தெலுங்கில் முதல் நாளில் ரூ.15 கோடி வரை வசூல் ஈட்டி இருப்பதாக திரையரங்குகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் ‘எந்திரன்’ படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ.11 கோடி வரை வசூலித்தது. அந்த வசூலை ‘லிங்கா’ முறியடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி