இன்று 5–வது மற்றும் கடைசிநாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி அதே ரன்னில் ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் இந்தியாவுக்கு 364 ரன் இலக்கு (98 ஓவர்) நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக இருந்தது. ஜான்சன் ஓவரில் தொடக்க ஜோடி பிரிந்தது. தவான் 9 ரன்னில் விக்கெட் கீப்பர் ஹாடினிடம் ‘கேட்ச்’ கொடுத்து வெளியேறினார். அப்போது ஸ்கோர் 16ஆக இருந்தது. அடுத்து களம் வந்த புஜாராவும் நீண்ட நேரம் களத்தில் இருக்கவில்லை. லயன் பந்தில் அவர் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஸ்கோர் 57ஆக இருந்தது. 3–வது விக்கெட்டுக்கு முரளிவிஜய்யுடன், கேப்டன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிகையுடன் ஆடியது. குறிப்பாக கோலி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் 34–வது ஓவரில் இந்திய அணி 100 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து இருந்தது. முரளிவிஜய் 47 ரன்னிலும், கோலி 27 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
பின்னர் இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை எடுத்தனர். முரளிவிஜய் முதலில் 50 ரன்னை எடுத்தார். 131 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் அரைசதம் எடுத்தார். அதை தொடர்ந்து வீராட்கோலி 69 பந்துகளில் 50 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரியும், 1 சிக்சரும் அடங்கும். இருவரும் இணைந்து 100 ரன்னை எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினார்கள். முரளி விஜய்யும், கோலியும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். ரன் இலக்கை முன்னேறுவது சவாலானது. இதனால் இந்த டெஸ்ட் ‘டிரா’வை நோக்கி செல்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி