சென்னை:-தமிழுக்கு வந்த வேகத்திலேயே பல வெற்றிகளை குவித்தவர் நடிகை லக்ஷ்மி மேனன். தற்போது தமிழில் ‘சிப்பாய்’, ‘கொம்பன்’ என இரண்டு படங்களில் நடித்து வரும் அவர், பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாடலை பாடிய அவர் அனைவரின் பாராட்டையும் பெற்றார். இப்போது ‘சாஹசம்’ படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். தமன் இசையில், மதன் கார்க்கி வரிகளில் அந்த பாடலை பாடியுள்ள லக்ஷ்மி மேனன், வருங்காலத்தில் நல்ல வாய்ப்புகள் வந்தால் பாடுவதை தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி