செய்திகள்,திரையுலகம் சாக்லெட் காஸ்டியூம் அணிந்து நடனமாடிய நடிகை சோனம் பாஜ்வா!…

சாக்லெட் காஸ்டியூம் அணிந்து நடனமாடிய நடிகை சோனம் பாஜ்வா!…

சாக்லெட் காஸ்டியூம் அணிந்து நடனமாடிய நடிகை சோனம் பாஜ்வா!… post thumbnail image
சென்னை:-கப்பல் படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை சோனம் பாஜ்வா. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரை, கப்பல் படத்தின் பாடல் காட்சிகளில் அழகு மிளிர காண்பித்திருக்கிறார்களாம். ஒரு பாடல் காட்சியில், சாக்லெட் உடையணிந்து நடனமாட வைத்திருக்கிறார்களாம். அந்த பாடலில் இவர் நடனமாடிக்கொண்டிருக்கும்போது, சாக்லெட் ஆடைகள் உருகுவது போல் படமாக்கப்பட்டுள்ளதாம்.

அதோடு, அந்த பாடல் காட்சியில் அவர் மீது வித்தியாசமான லைட் வெளிச்சம் பாய்வது போன்று லைட் செட் பண்ணி காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். அதனால், சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே என்னை வித்தியாசமான காஸ்டியூம்களில், இன்னும் அழகுபடுத்தி காண்பித்திருக்கிறார்கள் என்று உற்சாகம் பொங்க சொல்கிறார் சோனம் பாஜ்வா. மேலும், இந்த படத்தில் பாடல் காட்சிகளில் ஓரளவு கிளாமராக நடித்திருந்தாலும், பர்பார்மென்ஸ் பண்ணவும் எனக்கு பல காட்சிகள் உள்ளன.

முக்கியமாக, காதலுக்கும், நடபுக்குமிடையே நடக்கும் போராட்டத்தில் சிக்கி உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்று கூறும் சோனம் பாஜ்வா, முதல் படத்திலேயே கிளாமர், நடிப்பு என இரண்டுவிதமான பர்பாமென்ஸ் பண்ண எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய அதிர்ஷ்டம்தான் என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி