செய்திகள்,திரையுலகம் காதலருடன் ஊர் சுற்றும் நடிகை திரிஷா!…

காதலருடன் ஊர் சுற்றும் நடிகை திரிஷா!…

காதலருடன் ஊர் சுற்றும் நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திரிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாயின. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. வருண்மணியனுடன் திரிஷா நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்தன.

வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று திரிஷா மறுத்தார். நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்றார். ஆனாலும் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை என்றும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். இந்நிலையில் வருண்மணியனுடன் திரிஷா ஊர் ஊராக செல்ல துவங்கியுள்ளார். இருவரும் தனி விமானத்தில் பறந்து கொண்டு இருக்கிறார்கள். இரு தினங்களுக்கு முன் விமானத்தில் டெல்லி சென்றனர்.

ஆக்ராவுக்கு சென்று தாஜ்மகாலை சுற்றி பார்த்தார்கள். அதன் முன்னால் நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டனர். இவர்களுடன் சில தோழிகளும் சென்று இருந்தார்கள். இது போல் வெளி நாடுகளுக்கும் சென்று வர திட்டமிட்டு உள்ளார்கள். எந்தெந்த நாடுகள் என்பதை ரகசியமாக வைத்து இருக்கிறார்கள். சுற்றுப் பயணங்களை முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்கின்றனர். திரிஷா தற்போது படங்களையும் குறைத்துவிட்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டார் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி