ஊர் நாட்டாமை விஜயகுமார் ரஜினியை நினைத்துப் பெருமைப்படுகிறார். அணை கட்டுவதற்கு உதவியாகவும், ரஜினிக்கு ஆறுதலாகவும் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா சந்தோஷப்படுகிறார். அப்போதுதான் நடக்கக்கூடாத அந்த விபரீதம் நடக்கிறது. ஆங்கிலேயருக்குக் கைத்தடியாக இருக்கும் ஆர்.சுந்தர்ராஜன் அணை திறப்பு விழாவிற்கு வரும் ரஜினியை அவமானப்படுத்துகிறார். இதனால், மனம் கலங்கும் ரஜினி அணை திறக்காமலேயே சென்றுவிடுகிறார். ரஜினியுடன் சோனாக்ஷி சின்ஹாவும், சோனாக்ஷி தந்தை ராதாரவியும் சென்றுவிடுகிறார்கள். அதற்குப் பிறகு அந்த அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை.
அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் தாதா ரஜினி. எந்த இடத்தில் வைரம் கிடைத்தாலும் அதைக் கொள்ளையடித்து விட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார். அவரை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அணை வழியாக வரும் ரஜினி அங்கேயே தலைமறைவாகி விடுகிறார். அப்போதுதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒளிந்திருந்து வழிப்பறி செய்வது, கொலை செய்வது பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவதைக் கண்டுபிடிக்கிறார். அந்த சமயத்தில் பெரியவர் ரஜினியை சந்திக்கிறார். மனம் திருந்துகிறார். இந்நிலையில் பெரியவர் ரஜினியும், அணையில் பதுங்க வந்த வில்லன் ரஜினியும் இணைந்து எப்படி அணையை மீட்டுக் மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் ‘லிங்கா’ படத்தின் மீதிக்கதை. அனுஷ்கா வழிப்பறிக் கொள்ளையர்களைப் பிடிக்கும் வீராங்கனையாக நடிக்கிறார். தாதா ரஜினிக்கு அனுஷ்காதான் ஜோடி. தேவ் கில் சமூக விரோதக் கூட்டத்தில் கலகம் செய்யும் நபராக நடிக்கிறார். பெரியவர் ரஜினியுடன் மோதும் தேவ் கில் சிறைக்குச் செல்கிறார். தண்டனை முடிந்துவந்த உடன் மீண்டும் ரஜினியுடன் மோதுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி