இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும் போது, டிசம்பர் மாதம் பொதுவாக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்து மந்தமாகவே இருக்கும். இந்த சமயத்தில் ‘லிங்கா’ படம் வருவது திரையரங்கு உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதமாகும். ஒரு வாரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. அனைத்து தியேட்டர்களும் நாளை முதல் நிரம்பி வழியப்போகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்றார்.
உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ‘லிங்கா’ வருகிறது. அமெரிக்காவில் 328 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், சிசன், தேவி, தேவி பாரடைஸ், தேவிகலா, தேவிபாலா, எஸ்கேப், வினஸ், ஸ்ப்ரிக், ஸ்பாட் வேவ், உட்லண்ட்ஸ், சிம்பொனி, ஐநாக்ஸ், ஸ்கிரீன், சாந்தி, சாய்சாந்தி, ஆல்பட், பேபி ஆல்பட், அபிராமி, ஸ்வர்ணசக்தி, அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, சங்கம், பத்மம், ரூபம், பி.வி.ஆர்., எஸ் 2 பெரம்பூர், கமலா, உதயம், சூரியன், சந்திரன், ஐ.டிரீம்ஸ், மகாராணி, பாரத், சைதைராஜ் போன்ற தியேட்டர்களில் ‘லிங்கா’ படம் திரையிடப்படுகிறது.
காசி தியேட்டரில் நள்ளிரவு 12 மணிக்கு ரஜினி ரசிகர்கள் சைதை ஜி.ரவி தலைமையில் ரஜினி பிறந்த நாள் ‘கேக்‘ வெட்டுகின்றனர். சென்னை மாவட்ட ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகள் ராமதாஸ், சூர்யா, ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் ரஜினி கட்அவுட்கள் வைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கட்டப்பட்டு உள்ளது. பேனர்களும் வைத்துள்ளனர்.நடிகர், நடிகைகள் பலர் சிறப்பு காட்சியில் ‘லிங்கா’ படம் பார்க்க தயாராகிறார்கள். நடிகர் தனுஷ் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு ‘லிங்கா’ படம் பார்க்க சென்னை வந்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி