செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம்!…

இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம்!…

இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம்!… post thumbnail image
லண்டன்:-மலேரியா நோய் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுகிறது. இதை தடுக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், இந்தியாவில் மலேரியாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு 28 கோடி பேர் மலேரியா நோய் பாதிக்கும் அபாயத்தில் உள்ளனர். தற்போது 12.8 கோடி பேரை இந்த நோய் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.ஆனால் 8.81 லட்சம் பேர் மட்டுமே இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்தியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் 7 சதவீதம் மலேரியா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகள் இருந்தும் இந்தியாவில் மலேரியா நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி