தமிழர் பெருமை. வெறும் தற்பெருமை அல்ல… வரலாற்று உண்மை… என்று உலகிற்கு பறைசாற்றியது இக்காவியம். இக்காவியத்தை திரைப்படமாக்க பல முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் முன்வந்தனர். ஆனால், அந்த முயற்சியில் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. ஒருசிலர், தொலைக்காட்சி தொடராகவும் எடுக்க முன்வந்தனர். அவர்களுக்கும் அதில் தோல்வியே கிட்டியது.
இந்நிலையில், இக்காவியத்தை இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்க இருக்கிறார்கள். வளமான தமிழகம் இயக்கத்தின் நிறுவனரான பொ.சரவணராஜா இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இன்று உலகையை தன் கைபேசியில் வைத்திருக்கும் இன்றைய இளைய தலைமுறையையும் இக்காவியம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி