செய்திகள்,திரையுலகம் என் பெயர் பவித்ரா (2014) திரை விமர்சனம்…

என் பெயர் பவித்ரா (2014) திரை விமர்சனம்…

என் பெயர் பவித்ரா (2014) திரை விமர்சனம்… post thumbnail image
சிறுவயதிலேயே ஸ்ரேயாவின் அப்பா இறந்து போக அவளது குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவளது அம்மாவுக்கு புற்றுநோய் வேறு இருக்கிறது. அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. என்ன செய்வதென்று குடும்பமே விழித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவளது தாய்மாமா விபச்சாரத்தில் ஈடுபட்டால் நிறைய பணம் கிடைக்கும் என்று அவளுக்கு ஆசை காட்டுகிறார்.இதில் விருப்பம் இல்லாவிட்டாலும், தனது அம்மாவின் சிகிச்சைக்காக விபச்சாரத்தில் ஈடுபட அவள் முடிவெடுக்கிறாள். ஒருகட்டத்தில் அம்மாவும் இறந்து போகிறார். அம்மா இறந்து போன பிறகும் தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறாள். விபச்சாரத்தில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் தனக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து காப்பாற்றி வருகிறார்.

ஒருநாள் அந்த ஊர் எம்.எல்.ஏ.வின் மகன் திருமண ஆசை இல்லாமல் இருந்து வருகிறான். அவனுக்கு தன்னுடன் நெருக்கமாக உள்ளவரின் பெண்ணை திருமணம் செய்து வைத்தால் தனக்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும் என்று எம்.எல்.ஏ. திட்டமிடுகிறார். தனது எண்ணத்தை நிறைவேற்ற அவனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று முயற்சிக்கிறார்.அதன் ஒரு கட்டமாக அவனுக்கு திருமண ஆசையை தூண்ட ஸ்ரேயாவை அவனிடம் அனுப்பி வைக்கிறார். ஸ்ரேயாவை பார்த்ததும் அவள் மீது காதலில் விழுகிறார் எம்.எல்.ஏ.வின் மகன். அவளைத்தான் கல்யாணம் முடிப்பேன் என தந்தையிடம் கூறுகிறான். ஆனால், எம்.எல்.ஏ.வோ மகனின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். மகனிடமிருந்து அவளை பிரிக்க பார்க்கிறார்.இறுதியில், எம்.எல்.ஏ., தனது மகனின் மனதை மாற்றினாரா? ஸ்ரேயாவுக்கும் எம்.எல்.ஏ., மகனுக்கு திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை. ஸ்ரேயா இப்படத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளியாக நடித்திருக்கிறார். வறுமைக்காக பாலியல் தொழிலில் தள்ளப்படும் அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் கவர்கிறார்.

ஆனால், இவரை விபச்சாரி வேடத்தில்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டாக்டராக வரும் நிழல்கள் ரவி, ரோஜா ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் மனோபாலா, மயில்சாமி ஆகியோர் வரும் காட்சிகள் கலகலப்பு. நாயகனாக நடித்திருக்கும் கௌசிக் பாபு ஒருசில காட்சிகள்தான் வருகிறார். அவருக்குண்டான கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார். பாலியல் தொழிலாளியின் கதையை ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் வித்யாசாகர். கதைக்கு தேவையான, அளவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, திறமையாக கையாண்டிருக்கிறார். ஸ்ரீலேகா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம் தான். வி.என்.சுரேஷ்குமாரின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘என் பெயர் பவித்ரா’ காதல்……………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி