செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’வுடன் மோத ரெடியான திரைப்படம்!…

‘லிங்கா’வுடன் மோத ரெடியான திரைப்படம்!…

‘லிங்கா’வுடன் மோத ரெடியான திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-ஸ்டார் அந்தஸ்து நடிகர்கள் படங்கள்கூட ‘லிங்கா’ ரிலீஸை கண்டு வேறு தேதிக்கு தங்கள் ரிலீஸை தள்ளிவைத்துக்கொண்டனர். ஆனால் புதுமுகங்கள் ராம், ஆதிரா நடித்துள்ள ‘யாரோ ஒருவன்’ படம் ரஜினி பிறந்தநாளிலேயே ரிலீஸ் செய்கிறார்களாம். ஏன் இந்த முடிவு என இயக்குனர் கே.என்.பைஜூவிடம் விசாரித்தபோது கூலாக பதில் அளித்தார்.

லிங்காவை தவிர வேறு எந்த படமும் டிசம்பர் 12ல் ரிலீஸ் ஆகவில்லை. லிங்கா திரையிடப்படாத தியேட்டர்கள் எங்களுக்கு கிடைப்பதால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி ரிலீஸ் செய்கிறோம். துப்பறியும் நிபுணர் மற்றும் அவரது குழுக்கள் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்கள்தான் இதன் கதை. சுரேஷ் நாரங், மானவராவ், அலிஷா, நெடுக்காடு ராஜ், ஒரியன், சான்ட்ரான்னு வித்தியாசமான பேர்கொண்ட நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் பத்மராஜுடன் பணியாற்றியிருக்கும் நான் இப்படத்தை எழுதி இயக்குவதுடன் இசை, எடிட்டிங் பொறுப்பும் ஏற்றிருக்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி