அதில் அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாட்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.சோனியாகாந்தி ஆண்டு தோறும் தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுவார். பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இன்று முதல் முதலாக பிறந்த நாள் வந்துள்ளது. இந்த பிறந்த நாளை சோனியா காந்தி கொண்டாடவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட பலர் உயிர் இழந்தனர். சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தாக்குதலிலும் பலர் பலியானார்கள். எனவே சோனியா இன்று பிறந்த நாள் விழாவை கொண்டாடவில்லை.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மத்தியில் ஆட்சியை பிடித்தது. சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் ஜம்மு காஷ்மீர், சத்தீஷ்கர் மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாதிகள் தாக்குதலில் பலர் உயிர் இழந்த நிலையில் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தொண்டர்கள் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி அவர் இன்று பிறந்தநாள் கொண்டாடவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி