பெங்களூர்:-கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹோஸ்பேட் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் சில மாணவர்கள் சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி ஒரு தனிமையான திறந்தவெளிக்கு நேற்று அழைத்துச் சென்றனர்.
அங்கு தனது மகளை அவர்கள் கூட்டாக சேர்ந்து கற்பழித்து விட்டதாக சிறுமியின் தாயார் அளித்த புகாரையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 4 சிறுவர்களை கைது செய்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சேத்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார். இந்த 4 சிறுவர்களும் ஹோஸ்பேட் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்ததாகவும், விசாரணைக்கு பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இளம்சிறார்கள் காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி