இந்திய அணி கேப்டன் டோனி நாளைய போட்டியில் விளையாடமாட்டார். கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் அடிலெய்ட் டெஸ்டில் விளையாட மாட்டார்.இதனால் இந்திய அணிக்கு வீராட்கோலி கேப்டனாக பணியாற்றுவார். அவர் முதல் முறையாக டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.விர்த்திமான் சகா விக்கெட் கீப்பராக இடம் பெறுவார்.ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் இந்த டெஸ்ட் தொடர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். கடந்த முறை (2011–12) ஆஸ்திரேலிய பயணத்தில் இந்திய அணிதான் மோதிய 4 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது.அது மாதிரியான நிலை தற்போது அமையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் டெஸ்ட் தொடரில் நாளை விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர்.
பயிற்சி ஆட்டத்தில் முரளி விஜய், ஹிகார்தவான், தற்காலிக கேப்டன் வீராட் கோலி, புஜாரா முத்திரை பதித்தார்கள். இதனால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்தில் வருண் ஆரோன், இஷாந்த் சர்மா, முகமதுஷமி உள்ளனர். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், கரண்சர்மா ஆகிய இருவர் இடம்பெறலாம்.ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் உடல் தகுதி பெற்றதால் நாளைய டெஸ்டில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.வார்னர், வாட்சன், ரோஜர்ஜ், சுமித், ஹாடின் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், மிச்சேல் ஜான்சன், பீட்டர்சிடில், ரியான் ஹாரிஸ், ஹாஸ் லேவுட் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.ஹியூக்ஸ் மரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியால் நாளைய டெஸ்ட்டில் முழு திறமையை வெளிப்படுத்த இயலுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி