செய்திகள்,திரையுலகம் நடிகை திரிஷாவை புகழும் விவேக்!…

நடிகை திரிஷாவை புகழும் விவேக்!…

நடிகை திரிஷாவை புகழும் விவேக்!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தில் விவேக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திரிஷா அறிமுகமான ‘லேசா லேசா’ படத்தில் விவேக் காமெடி வேடத்தில் நடித்து கலகலப்பூட்டியிருந்தார். தொடர்ந்து திரிஷா நடித்த பல படங்களிலும் விவேக் நடித்துள்ளார். தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

‘லேசா லேசா’ படம் வெளியாகி 12 வருடங்கள் ஆன நிலையில், இப்போதும் அந்த படத்தில் இருப்பது போலவே, திரிஷா இருக்கிறார் என்று அவரை புகழ்ந்திருக்கிறார் விவேக். இதுகுறித்து, விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, 12 வருடங்களுக்கு முன்பு நான் ‘லேசா லேசா’வில் பார்த்த திரிஷா இப்போதும் அப்படியே இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவருடைய அழகு மேலும் பல மடங்கு கூடியிருக்கிறது என்று கூறியுள்ளார். பதிலுக்கு திரிஷாவும், நீங்களும் அப்படியேதான் இருக்கீறீர்கள். நன்றி விவேக் என்று கூறியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி