இதுதொடர்பாக விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு செய்தது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான எய்ட்ஸ் பாதித்த பெண்களை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு கிருமி புகுந்து நீண்ட காலத்திற்கு பிறகே நோய் உருவாகி இருந்தது. அந்த எய்ட்ஸ் கிருமியை ஆய்வு செய்தபோது எய்ட்ஸ் கிருமியின் வீரியம் இழந்திருப்பது தெரிய வந்தது.
எய்ட்ஸ் கிருமி தான் உயிர் வாழ்வதற்காக ஏற்படுத்தி கொள்ளும் உயிரியல் மாற்றத்தின் காரணமாக அவை வீரியம் இழந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறினார்கள். கிருமிகள் வீரியம் குறைந்திருந்தாலும் இன்று வரையில் எய்ட்ஸ் கிருமிகளை அழிக்க முடியாத நிலையே இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி