மேலும் பறவை காய்ச்சலால் பாதித்த வாத்து, கோழிகளை உடனடியாக அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை பறவை காய்ச்சல் பாதித்த 3 மாவட்டங்களிலும் 2 லட்சத்து 60 ஆயிரம் வாத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கேரள கால்நடைத்துறை மந்திரி மோகனன் தெரிவித்துள்ளார். இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவவில்லை என்றும், ஆலப்புழா, கோட்டாயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சம் பொதுமக்களிடம் சோதனை செய்ததில் யாருக்கும் பறவை காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மந்திரி மோகனன் உறுதி செய்துள்ளார்.
ஆலப்புழா உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பறவை காய்ச்சல் தடுப்பு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பறவை காய்ச்சல் பாதித்த வாத்துகள், கோழிகளை அழித்தபோது, சம்பந்தப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, இதுவரை ரூ.84 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி