அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.அந்துலே காலமானார்!…

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.அந்துலே காலமானார்!…

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.அந்துலே காலமானார்!… post thumbnail image
மும்பை:-மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான ஏ.ஆர். அந்துலே உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த மாதம் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மருமகன் முஸ்தாக் அந்துலே கூறியுள்ளார்.

85 வயதாகும் அந்துலே மூத்த காங்கிரஸ் தலைவராவார். மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவி வகித்த அவர், யு.பி.ஏ.-1 அரசில் மந்திரியாகவும் இருந்தார். அம்மாநிலத்தின் கொங்கன் பகுதியை சேர்ந்தவரான அந்துலேவின் இறுதி சடங்கு, ராய்காட் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ஆம்பெட் கிராமத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி