இதனைத்தொடர்ந்து நேற்று லிஸ்ஸி சென்னை நீதிமன்றத்தில் விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து லிஸ்ஸி மீடியாக்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் 24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நானும் பிரியதர்ஷனும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன்.
எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களும் அறிவார்கள். இந்த கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின் தனியுரிமை மதித்து செயல்படமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி