பின்னர் பெண் பத்திரிகையாளர் பூனம்கண்ணாவுக்கும், சனாகானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சனாகானும், அவரது நண்பர்கள் இஸ்மாயில்கான், ராமுகனோஜியா ஆகியோர் தன்னை மோசடி பேர்வழி என சித்தரித்து இன்டர்நெட்டில் செய்தி பரப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் பூனம்கண்ணா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி சனாகானையும், இஸ்மாயிலையும் கைது செய்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள்.
பூனம்கண்ணா வீடு வாங்கி தருவதாக ஏமாற்றி என்னிடம் பல லட்சங்கள் மோசடி செய்துவிட்டார் என்றும் சனாகான் போலீசில் புகார் அளித்தார். புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி பூனம்கண்ணாவை கடந்த மாதம் கைது செய்தனர்.இந்நிலையில் சனாகான் மீது பூனம்கண்ணா, இன்னொரு புதிய புகாரை போலீசில் அளித்துள்ளார். அதில் தன்னிடம் சனாகான் பணமோசடி செய்துவிட்டதாகவும், அடியாட்கள் வைத்து மிரட்டுவதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சனாகான் மீண்டும் கைது ஆவாரா?… என்று மும்பை படஉலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி