செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை மாற்றம்!…

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை மாற்றம்!…

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை மாற்றம்!… post thumbnail image
பிரிஸ்பேன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட பிரிஸ்பேனில் 4ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், உள்ளூர் போட்டியில் விளையாடும்போது பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்த ஹியூக்ஸ் உடல் 3ம் தேதிதான் அடக்கம் செய்யப்படுகிறது. அடக்கம் செய்த அடுத்த நாளே விளையாட்டுக்கு எங்களை தயார் செய்து கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்கள் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்தார்.

இந்த கருத்தை ஆமோதித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் 4 போட்டிகளுக்கான அட்டவணையை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, பிரிஸ்பேனில் 4-ந்தேதி தொடங்குவதாக இருந்த முதல் டெஸ்ட் அடிலெய்டில் வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறும். அடிலெய்டில் 12-ந்தேதி நடக்க இருந்த 2-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. 3-வது டெஸ்ட் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் மெல்போர்னில் பாக்சிங் நாளான (பாக்சிங் டே) கிறிஸ்துமஸ் நாளுக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. 4-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 3-ந்தேதி நடக்கவிருந்தது. அந்த போட்டி, 6-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. புதிய அட்டவணைபடி 7-ந்தேதி முடிவடைய இருந்த டெஸ்ட் தொடர் 10-ந்தேதி முடிவடைய இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி