மக்காவ்:-சீனாவில் நடைபெற்று வரும் மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக தர வரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, 91-வது இடத்தில் இருக்கும் கொரியாவைச் சேர்ந்த கம் ஹியோ மின்னை எதிர்கொண்டார்.
இதில் சிந்து 21-12, 21-17 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற சிந்துவிற்கு 45 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது. கம் ஹியோ அரை இறுதிப் போட்டியில் 7-வது இடத்தில் இருக்கும் சீனாவைச் சேர்ந்த யு சன்னை வீழ்த்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி