செய்திகள்,திரையுலகம் வேல்முருகன் போர்வெல்ஸ் (2014) திரை விமர்சனம்…

வேல்முருகன் போர்வெல்ஸ் (2014) திரை விமர்சனம்…

வேல்முருகன் போர்வெல்ஸ் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் கிராமம் கிராமமாக சென்று போர் போடும் தொழில் செய்து வருகிறார் கஞ்சா கருப்பு. இதில் நாயகன் மகேஷ், பாண்டி மற்றும் சிலர் வேலை செய்கிறார்கள். நாயகன் மகேஷ் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏற்றார்போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறார். அப்போது ஒருநாள் உள்ளூர் டி.வி.யில் நாயகி ஆருஷியை பார்க்கிறார். அதில் நாயகி ஆருஷி தான் ஒரு நல்ல மனைவியாக என் கணவரையும் அவரது குடும்பத்தையும் பார்த்து கொள்வேன் என்று சொல்கிறார். இதைப்பார்த்தவுடன் மகேஷ் எப்படியாவது அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

இந்நிலையில் கஞ்சா கருப்பு வெளியூர் செல்கிறார். இதனால் பொறுப்புகளை மகேஷிடம் ஒப்படைத்து, பல இடங்களில் போர் போட வேண்டியது உள்ளது என்று அதன் விவரங்களையும் கொடுத்து விட்டு செல்கிறார். ஆனால் உடன் வேலை செய்யும் பாண்டியோ நாயகியின் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. அங்கு சென்று இலவசமாக போர் போட்டு கொடுத்தால் அந்த கிராமத்து மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறி அழைத்து செல்கிறார்.நாயகனும் அங்கு போர் போட்டு தண்ணீர் எடுத்து உடனே கிடைக்கும்படி செய்கிறார். அதனால் தண்ணீர் பிடிப்பதில் பெண்களிடையே சண்டை ஏற்பட்டு, அது ஊர் கலவரமாக மாறுகிறது. இதில் பலர் காயம் அடைகிறார்கள்.அந்நேரத்தில் ஊர் தலைவரான நாயகியின் அப்பா ஊரை சமாதானப்படுத்தி, இதற்கு காரணமாக இவர்களையும், இவர்களது பொருட்களையும் ஊரைவிட்டு வெளியே விடாமல் ஊர் மக்களுக்கு சேவை செய்ய வைக்கிறார். இந்நிலையில், அந்த ஊரில் காதலே இல்லை என்றும் காதலிப்பதே கிடையாது என்றும் நாயகன் அறிகிறார்.

இறுதியில் ஊர் மக்களிடமிருந்து நாயகன் தப்பித்தாரா, காதலே இல்லாத ஊரில் நாயகியிடம் காதலை சொல்லி இணைந்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.நாயகன் மகேஷ் மிக எதார்த்தமாக நடித்து ரசிக்க வைக்கிறார். நடனம், ஆக்ஷன், காமெடி என்று திறம்பட செய்திருக்கிறார். நாயகி ஆருஷி கிராமத்து பெண்ணாக தாவணியில் திரையில் அழகாக இருக்கிறார். தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.வேல்முருகன் போர்வெல்ஸ் முதலாளியாக வரும் கஞ்சா கருப்பு இப்படத்தை தயாரித்தது மட்டுமில்லாமல் தனது கதாப்பாத்திரத்தை நகைச்சுவையுடன் சிறப்பாக செய்திருக்கிறார். நண்பனாக வரும் பாண்டி, மற்றும் குழுவினர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஸ்ரீகாந்த்தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. இயக்குனர் எம்.பி. கோபி கிராமத்தில் நடக்கும் எதார்த்தமான கதையை மிகவும் அழகாக திரைக்கதை அமைத்து படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது.

மொத்தத்தில் ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ காமெடி…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி