செய்திகள்,திரையுலகம் உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் ‘லிங்கா’ ரிலீஸ்!…

உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் ‘லிங்கா’ ரிலீஸ்!…

உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் ‘லிங்கா’ ரிலீஸ்!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீசாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ரஜினி பிறந்த நாளையும், லிங்கா படம் ரிலீசையும் ஒன்றாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

லிங்கா ரிலீசுக்கு முன்பு பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தை தயாரித்த ‘ராக்லைன்’ வெங்கடேஷிடம் இருந்து படத்தின் மொத்த உரிமையும் ஈராஸ் பட நிறுவனம் வாங்கி விட்டது. ரூ.165 கோடிக்கு கைமாறியதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன் பிறகு செட்டிலைட் தியேட்டர் உரிமைகள், வெளிநாட்டுக்கான உரிமைகள் என ரூ.200 கோடி வரை வியாபாராமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான உரிமையை ரூ.70 கோடி கொடுத்து வேந்தர் மூவிஸ் வாங்கி இருக்கிறது. ரஜினியின் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு போனது இல்லை என்கின்றனர்.

லிங்கா படம் உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதுவும் சாதனையாக கருதப்படுகிறது.இதுவரை ரஜினி படங்கள் எதுவும் இவ்வளவு தியேட்டர்களில் திரையிடப்பட்டது இல்லை.தமிழகத்தில் மட்டும் 700 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. இதுவரை 650 தியேட்டர்கள் ‘லிங்கா’ படத்துக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதி 50 தியேட்டர்கள் தேர்வு நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 65 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.அமெரிக்காவில் மட்டும் 200 தியேட்டர்களில் திரையிடுகின்றன. அங்கும் இவ்வளவு தியேட்டர்களில் வேறு எந்த படமும் திரையிடப்பட்டது இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி