செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் நைஜீரியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 120 பேர் பலி- 270 பேர் படுகாயம்!…

நைஜீரியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 120 பேர் பலி- 270 பேர் படுகாயம்!…

நைஜீரியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 120 பேர் பலி- 270 பேர் படுகாயம்!… post thumbnail image
கானோ:-நைஜீரியாவில் வடக்கு பகுதியில் உள்ள கானோ நகரில் பெரிய மசூதி உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த மசூதியில் இந்நாட்டின் முக்கிய தலைவர்கள் தொழுகை செய்வார்கள். இந்த மசூதி கானோ மன்னர் 2–ம் முகமது சனாசியின் அரண்மனையுடன் இணைந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை 2 மணியளவில் அங்கு தொழுகை நடந்தது. அப்போது அங்கு புகுந்த தற்கொலை படை தீவிரவாதிகள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர்.

அங்கு 2 தடவை அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. தொழுகையில் கலந்து கொண்டவர்கள் அங்கு மிங்கும் ஓடினர்.இந்த தாக்குதலில் 120 பேர் பலியாகினர். 270 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த தொழுகையின் போது கானோ மன்னரும், மதகுருவுமான 2–ம் முகமது சனாசி உரை நிகழ்த்தினார்.அப்போது போகோஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும்படி வலியுறுத்தினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தீவரவாதிகள் இங்கு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையே, இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு காலையில் மைதுகுரியில் உள்ள ஒரு மசூதியில் 2 வெடிகுண்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.அதை தக்க நேரத்தில் பார்த்து அகற்றி செயல் இழக்க செய்தனர். இதனால் அங்கு எந்த வித உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை.
இதற்கிடையே, தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு நைஜீரியா அதிபர் குட்லக் ஜோனா தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் மன வலியோடு நமது பொது எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி