மூன்றாவதாக, வேறு எந்தப் படத்திற்கும், நல்ல திரையரங்குகளை அமைப்பது கடினம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஐ படம், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. என்னைஅறிந்தால் படமும் அதற்குக் குறையாமல் வெளிவரும். அஜித் படங்களுக்கென்று எப்போதுமே நல்ல ஓபனிங் இருக்கும்.அதிலும், இந்தப்படத்தில், அவர் முதன்முறையாக கௌதம்மேனனுடன் இணைந்திருப்பதாலும், ஒரு வருடம் கழித்து, அவர் படம் வருவதாலும், அந்தப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
எனவே, தமிழில் பொங்கலுக்கு இந்த இரண்டு படங்களைத் தவிர வேறு எந்தப்படம் வெளிவந்தாலும், தியேட்டர்கள் கிடைப்பது கடினம் என்கிறார்கள். இதே நிலைமைதான், தெலுங்கிலும் உள்ளதாம்.அங்கும் ஜுனியர் என்டிஆர், வெங்கடேஷ் – பவன்கல்யாண் நடிக்கும் படங்கள் பொங்கலுக்கு வெளிவர உள்ளன. தற்போது ஐ படமும், பொங்கலுக்குப் போட்டி போடுவதால், மற்ற சில படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படும் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி