மும்பை:-‘தம் மாரே தம்…’ பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை ஜீனத் அமன். இவர் ‘குர்பானி’ படத்தில் பல காட்சிகளில் பிகினியில் நடித்திருந்தார். பாலிவுட் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த ஜீனத்தின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. சஞ்சய் கான் என்பவரை திருமணம் செய்து இரண்டு வருடத்தில் விவாகரத்து செய்தார்.
அதன் பின் மஸார் கான் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு அஸான், சஸான் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். கணவரின் கொடுமை தாங்காமல் 1998ல் விவாகரத்து செய்தார். இந்நிலையில் 63 வயதான ஜீனத் அமனுக்கு திடீர் திருமண ஆசை வந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், மீண்டும் ஒருமுறை நான் வாழ்க்கையில் செட்டிலாக எண்ணுகிறேன். எனது மகன்கள் படித்து நல்லநிலையில் உள்ளனர். எனக்கு ஏற்ற வாலிபர் கிடைத்தால் அவரை காதலித்து மணந்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி