சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஷ் தலைமையிலான குழுவினர் நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில், நித்யானந்தா நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் உறவு கொள்வதற்கான அனைத்து திறனும் அவரிடம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணை அறிக்கையை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.
இந்த அறிக்கையின் ஒரு நகல் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கைக்கு நித்யானந்தா சார்பில் ஆஜராக வக்கீல் ஆட்சேபனை தெரிவித்தார். குரல் சோதனை அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி