இந்நிலையில், சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சீனா மற்றும் பிற நாடுகள் மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறும்போது, தென் சீனக்கடல் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப்பணிகள், அங்கு நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கி விடும் என்று கூறினார்.
அமெரிக்காவின் இந்த கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹுவா சுனியிங் கூறுகையில், அந்த தீவில் நிறுத்தப்பட்டுள்ள படையினரின் நலனுக்காகவே கட்டுமானப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இது குறித்து பொறுப்பற்ற விமர்சனங்களை வெளிசக்திகள் கூற உரிமையில்லை என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி