ஐ.நா:-இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசிய பிராந்தியத்துக்கான மகளிர் நல்லெண்ண தூதரக இவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை எதிர்த்து பிரசாரம் செய்வதற்காக சானியாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சானியா மிர்சா பேசும்போது, பெண் என்பதால் பல சர்ச்சைகளில் சிக்கினேன். ஆணாக இருந்து இருந்தால் இவ்வளவு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருந்து இருக்காது. பெண் ஒரு பொருளாக பாவிக்கப்படும் மனநிலை மாறி ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணரும் நாள் விரைவில் வரும். நிறைய பெண்கள் விளையாட்டு துறைக்கு வரவேண்டும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி