சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். காயத்தின் தீவிர தன்மையை கண்டறிந்து அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. மூளையின் அழுத்தத்தை நிவர்த்தி செய்வதற்கான இந்த அறுவை சிகிச்சை நடந்தது. ஹியூக்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்துக்கு மேல் ஆனது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர் பீட்டர் புருக்னர் ஆஸ்பத்திரிக்கு வெளியே இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– ஹியூக்ஸ் உடல் நிலையில் எந்ந மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். மேலும் முன்னேற்றம் இருந்தால் உங்களிடம் உடனடியாக தெரியப்படுத்துவோம்.
ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கியத்தை தொடர்ந்து நியூ சவுத் வேல்ஸ்– தெற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஹியூக்ஸ் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக ஆடினார்.தற்போது ஹெட்பீல்டு–ஹூல்டு டிராபிக்கான முதல் தர போட்டியை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதற்கிடையே ஹியூக்ஸ் விரைவில் குணமடைய இந்திய வீரர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். தற்காலிக கேப்டன் வீராட் கோலி கூறும்போது ஹியூக்ஸ் உடல் நலம் தேற பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியுள்ளனர். உலக முழுவதும் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் இந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி