செய்திகள்,திரையுலகம் ரகளைக்கு தயாராகும் நடிகர்கள் ஆர்யா-சந்தானம்!…

ரகளைக்கு தயாராகும் நடிகர்கள் ஆர்யா-சந்தானம்!…

ரகளைக்கு தயாராகும் நடிகர்கள் ஆர்யா-சந்தானம்!… post thumbnail image
சென்னை:-சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களை இயக்கியவர் ராஜேஷ்.எம் அதோடு இவரது அத்தனை படங்களிலுமே காமெடிதான் பிரதானமாக இருந்தது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ராஜேஷ், தற்போது படப்பிடிப்பு நடத்த தயாராகி விட்டார்.

இன்னும் சில தினங்களில் அவர் தொடங்கும் புதிய படத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். முக்கியமாக, ராஜேஷின் படங்களில், அதிகமான வசனங்கள் பேசி நடிக்கும் சந்தானத்துக்கு இந்த படத்திலும் வழக்கம்போல், படம் முழுக்க ஆர்யாவுடன் வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

அவர்கள் ஏற்கனவே இணைந்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் தழுவில் இல்லாத வகையில் புதுமையான காமெடி காட்சிகளாக ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம் ராஜேஷ். மேலும், ஆர்யா-சந்தானம் இரண்டு பேருமே காமெடி காட்சிகளை உள்வாங்கி நடிக்கக்கூடியவர்கள் என்பதால் இந்த படத்தில் அவர்கள் இருவருமே ரகளை பண்ணப்போறாங்க என்கிறார் ராஜேஷ்.எம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி