மேலும் அவர்களை அவர் வெளிநாட்டில் ரகசியமாக தங்க வைத்திருப்பதாகவும், மாதம் ஒரு முறை சென்று பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அந்த ரகசியத்தை சமீபத்தில் அதிபர் புதின் உடைத்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் மகள்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது தனது மகள்கள் வெளிநாட்டில் தங்கவில்லை. ரஷ்யாவில் மாஸ்கோ நகரில்தான் தங்கியுள்ளனர். தேவைப்படும் போது அவர்களை வீட்டுக்கு சென்று பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
புதின் கடந்த 1999–ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவரை அதிபராக இருந்த போரிஸ் எல்சின் பிரதமராக்கி பின்னர் செயல் அதிபராக்கினார். தற்போது இவர் 2018–ம் ஆண்டில் நடைபெறும் அதிபர் தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதில் வெற்றி பெற்றால் அவர் 2024–ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார். இதுகுறித்து நிருபர்கள் கேட்ட போது, ஆயுள் முழுவதும் பதவியில் இருக்க நான் விரும்பவில்லை. அது நாட்டுக்கு நல்லதல்ல. அது மிகவும் ஆபத்தானது. எனவே அது எனக்கு தேவை இல்லை என்றும் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி