சென்னை:-தி.மு.க.வில் இருந்து குஷ்பு கடந்த ஜூன் மாதம் விலகினார். அக்கட்சியில் அவர் முன்னணி பேச்சாளராக இருந்தார். தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார்.அப்படிப்பட்டவர் தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? …என்பது பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளானார். இதன் மூலம் தி.மு.க. தலைவர்களுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க.வில் இருந்து விலகினார்.
குஷ்புவை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்தன. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பா.ஜனதாவில் அவர் இணையப் போவதாகவும் கூறப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு இன்டர்நெட்டிலும் இச்செய்தி வலுவாக பரவியது. குஷ்பு பா.ஜனதாவில் சேர்வது உறுதி என்று கூறப்பட்டது.
இதனை டுவிட்டரில் குஷ்பு மறுத்துள்ளார். பா.ஜனதாவில் நான் இணைவதாக சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி