சென்னை:-இயக்குனர் ஷங்கர் வெளியிட இருக்கும் படம் கப்பல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பேசிய ஷங்கர், நான் நண்பன் படம் ஆரம்பிப்பதற்கு 2 நாள் முன் விஜய்யை பார்த்தேன், அவரிடம் பேச்சு கொடுக்க சென்ற போது, விலகி விலகி சென்றார்.
ஆனால், சுவாரசியமாக பேச ஆரம்பித்தவுடன் தான் அவர் என்னிடம் பேச தொடங்கினார். தற்போது நாங்கள் காலேஜ் ப்ரண்ட்ஸ் போல் ஆகிவிட்டோம். அவரிடம் பழகுவது கடினம், பழகிவிட்டால் அண்ணா என்று அன்போடு அழைப்பார் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி