சென்னை:-பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர் ஆதிராம். இவர் தமிழில் இயக்கிய சிலந்தி படம்தான் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட முதல் சிறு பட்ஜெட் படம். மோனிகா கவர்ச்சியாக நடித்த ஒரே படமும் இதுதான். ஆதிராம் தற்போது ரணதந்திரா என்ற கன்னட படத்தை இயக்கி வருகிறார்.
இதில் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மருமகன் விஜயராகவேந்திரா ஹீரோவாக நடிக்கிறார். ஹரிப்ரியா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தமிழில் தயாராகிறது.
தமிழில் அதர்வணம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார், எம்.கார்த்திக் இசை அமைத்திருக்கிறார். படப்படிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. சிலந்தியில் மோனிகாவை கவர்ச்சியாக நடிக்க வைத்ததைப்போல இதில் ஹரிப்ரியாவை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி