சென்னை:-தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் மா.கா.பா.ஆனந்த். தற்போது தனது பெயரை சினிமாவுக்காக மா.கா.பா. என்று சுருக்கி இருக்கிறார். இவர் தற்போது நடித்து வரும் படம் அட்டி. இதில் அவர் கானா பாடகராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஸ்மிதா நடிக்கிறார். மாஜி ஹீரோ ராம்கி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இது காமெடி படம். சென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையில் உள்ள நக்கல், நையாண்டிகள், அவர்களின் வாழ்வியல் யதார்த்தங்களை சொல்லும் படம். மா.கா.பா. கானா பாடகராக நடிக்கிறார். இதற்காக அவர் பல கானா பாடகர்களை சந்தித்து அவர்களின் மேனரிசம். பாடும் முறை ஆகியவற்றை அறிந்து வந்து நடித்தார், படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஒருவருடைய பெயரை மூன்று எழுத்தில் சுருக்கி கூப்பிடுவது சென்னை வழக்கம். அந்த வகையில் ஹீரோவின் பெயர்தான் அட்டி. என்கிறார் இயக்குனர் விஜயபாஸ்கர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி