செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் மங்கள்யான்: டைம் பத்திரிகை பாராட்டு!…

2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் மங்கள்யான்: டைம் பத்திரிகை பாராட்டு!…

2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் மங்கள்யான்: டைம் பத்திரிகை பாராட்டு!… post thumbnail image
நியூயார்க்:-செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அனுப்பிய மங்கள்யான் விண்கலம், கடந்த செப்டம்பர் 24-ந்தேதி செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்து சரித்திர சாதனை படைத்தது.

இந்தியாவின் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்த மங்கள்யானுக்கு தற்போது மற்றொரு சிறப்பும் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட ‘மிகச்சிறந்த 25 கண்டுபிடிப்புகள்’ என டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் மங்கள்யானும் இடம் பிடித்துள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செவ்வாய் கிரக ஆய்வில் முதல் முயற்சியில் யாரும் வெற்றி பெறவில்லை. அது அமெரிக்காவால் முடியவில்லை, ரஷியாவால் முடியவில்லை.

ஐரோப்பியர்களால் முடியவில்லை. ஆனால் இந்தியா அதை செப்டம்பர் 24ம் தேதியன்று சாதித்து காட்டியது என்று கூறப்பட்டு உள்ளது. செவ்வாய் சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் நுழைந்தது ஒரு தொழில்நுட்ப சாதனை என்று கூறியுள்ள அந்த பத்திரிகை, இதை வேறு எந்த ஆசிய நாடும் இதுவரை சாதித்தது இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் மங்கள்யான் ஒரு ‘சூப்பர் ஸ்மார்ட்’ விண்கலம் என்றும் அதில் வர்ணிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி