நாயகன் அம்மாவான ஊர்வசி, தன் மகனுடன் படிக்கும் மாணவர்களுக்கு போன் செய்து, செந்திலுக்கு சென்னையிலேயே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார். மாணவர்கள், செந்தில் இங்கு ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறுகிறார்கள். சென்னைக்கு வரும் ஊர்வசி நிகிதாவை பார்த்தவுடன் பிடித்து போகிறது. இதனால் மகன் செந்திலுக்கு நிகிதாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இந்நிலையில் ஒரு தீவிரவாதி கும்பல் கொலை ஒன்றை செய்கிறார்கள். இதை நிகிதா போட்டோ எடுத்து விடுகிறார். இதையறிந்த தீவிரவாதிகள் நிகிதாவிடம் அந்த போட்டோக்கள் அடங்கிய மெமரிகார்டை கேட்கிறார்கள். ஆனால் நிகிதா அதை தர மறுக்கிறாள். இதனால் நிகிதாவை தீவிரவாத கும்பல் கொலை செய்துவிடுகிறார்கள். இதையறிந்து கோபமடையும் செந்தில் தீவிரவாத கும்பலை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில் குமார் நடிப்பது மட்டுமின்றி இப்படத்தை இவரே இயக்கியிருக்கிறார். வழக்கமான பழிவாங்கும் கதையை வைத்து அதை வித்தியாசமான திரைக்கதை அமைத்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் செந்தில் குமார்.செந்தில் குமார் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் நிகிதா ஆகியோர் புதுமுகம் என்பதால் தன்னால் முடிந்த வரை நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.முகமது ஆத்திப் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். கௌபாசு, ஒளிப்பதிவில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘விழி மூடி யோசித்தால்’ காதல்………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி