சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா ஆரம்பத்தில் ஸ்பாட்டில் செம கடலை போட்டு வந்தார். ஆனால், சமீபகாலமாக அடக்கி வாசித்து வருகிறார் அம்மணி. இதற்கு காரணம், அவரை வைத்து படம் இயக்கிய சில டைரக்டர்கள், டேக் ரெடியாகி விட்ட சேதியைகூட கண்டுகொள்ளாமல் ஹீரோக்களுடன் இவர் ஜாலி அரட்டையில் ஈடுபட்டதால், செம டோஷ் விட்டார்களாம்.
அதனால், அதிக வாயாடினால் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி விடும் என்றுதான் இப்போது பேச்சை குறைத்திருக்கிறாராம் நடிகை. அது மட்டுமின்றி, முன்பெல்லாம் தனது பாய் ப்ரண்டுகளுடன் போனில் பேசத் தொடங்கினால், எப்.எம். ரேடியோ போன்று நிறுத்தாமல் பேசி சுற்றியிருப்பவர்களை வெறுப்பேற்றும் ஸ்ரீதிவ்யா, இப்போது போனில் பேசினால், தனக்கு அருகில் அமர்ந்திருப்பவர்களுக்குகூட கேட்காத அளவுக்கு முணுமுணுக்கிறாராம். அந்த அளவுக்கு டைரக்டர்கள் விட்ட டோஷ் வேலை செய்கிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி