வாடிகன்:-கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் எலியாஸ் சவரா, அருட்சகோதரி எப்ரசியா ஆகியோர் புனிதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த இருவருக்கும் வாடிகனில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இவர்களுடன் புனிதர் பட்டம் பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2008-ல் இந்தியாவை சேர்ந்த அருட்சகோதரி அல்போன்சா புனிதராக அங்கீகரிக்கப்பட்டார்.
செயின்ட் பீட்டர்ஸ் சதுக்க நிகழ்ச்சியில் இந்தியர்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பி.ஜே.குரியன் தலைமையிலான இந்திய குழுவும் இவ்விழாவில் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி