இந்நிலையில் ஜப்பான் ஷிம்சு என்ற மற்றொரு கட்டுமான நிறுவனம் கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தை கட்ட போவதாக அறிவித்துள்ளது. 1500 அடி அகலத்தில் வட்டவடிவிலான கூண்டு அமைக்கப்படுகிறது. அதற்குள் வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு 5 ஆயிரம் பேர் தங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கு அட்லாண்டிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆழ்கடல் அதிநவீன நகரம் கட்ட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆழ்கடலில் 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உருவாக்கப்பட உள்ளது. இது வருகிற 2030ம் ஆண்டுக்குள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்படும் என ஷிம்சு கட்டுமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி