உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் அந்த வீடியோவை வெகுவாக ரசித்தார்கள். இசையமைப்பாளர் அனிருத், தனுஷ் இருவரும் ஒரே நாளில் இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட பேசப்பட்டார்கள். தேசிய செய்தித் தொலைக் காட்சிகள் கூட அவர்களின் பேட்டிகளை ஒளிபரப்பி மூலை முடுக்குகளில் கூட அந்தப் பாடலைப் பற்றி பேச வைத்தார்கள். அதைத் தொடர்ந்து அந்தப் பாடலை பல்வேறு விதங்களில் மாற்றியமைத்து யு டியுபில் பதிவேற்றி அவர்களும் பேசப்பட்டார்கள். ஒரு இலங்கைத் தமிழர், அந்தப் பாடலை சுத்தமான தமிழில் பாடி பதிவேற்றினார். பிரபல ஹிந்திப் பாடகரான சோனு நிகாமின் மகன் நீவான் நிகாம் அவருடைய மழலைக் குரலில் பாடிய கொலை வெறி பாடலும் பலராலும் ரசிக்கப்பட்டது. யு டியூப் என்ற ஒன்றின் மூலம் இந்த அளவிற்கு பைசா செலவில்லாமல் பெரும் புகழும், விளம்பரமும் கிடைக்கிறதே என்று அதன் பின்தான் திரையுலகினர் அவர்களது டிரைலர்கள், டீசர்கள், மற்ற வீடியோக்களை யு டியூபில் பதிவேற்றத் தொடங்கினார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் பதிவேற்றப்பட்ட ஒய் திஸ் கொலை வெறி பாடலை 8 கோடியே 61 லட்சத்து 44 ஆயிரத்து 161 பேர் பார்த்து ரசித்துள்ளார்கள். இந்த சாதனையை வேறு எந்த தமிழ்த் திரைப்பட வீடியோ..ஏன் இந்தியத் திரைப்பட வீடியோக்கள் கூட புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொலை வெறி பாடலின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி தனுஷ், ஹேப்பி கொலை வெறி..நாள்…மாற்றத்தின் நாள் இது…டிரெண்ட்…கொலை வெறியை ஒரு வழிபாடாகவே மாற்றிய உங்களுக்கு நன்றி…உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர் அனிருத், ஹேப்பி..கொலை வெறி..நாள்…என் வாழ்வை மாற்றிய நாள்…நவம்பர் 16, எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி