அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் காவிரியில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு: கர்நாடகம் அறிவிப்பு!…

காவிரியில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு: கர்நாடகம் அறிவிப்பு!…

காவிரியில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு: கர்நாடகம் அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு மாறாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இது தமிழ்நாட்டில், காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், கர்நாடக நீர் வளத்துறை மந்திரி எம்.பி. பாட்டீல், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், சட்ட அமைப்புக்கு உட்பட்டு, தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு நாங்கள் 192 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். எங்கள் பகுதியில் மழை வெள்ளம் ஏற்பட்டு அதையும் தாண்டி உபரி தண்ணீர் இருக்கிறபோது, அந்த தண்ணீரை பயன்படுத்துகிற உரிமை எங்களுக்கு இருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை மீறாமல் அணை கட்டுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி