சென்னை:-ராகவா லாரன்ஸ், தற்போது முனி படத்தின் 3 ஆம் பாகமாக கங்கா என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடித்து வருகிறார். ஒரு வருடத்துக்கும் மேலாக தயாரிப்புநிலையில் உள்ள கங்கா படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எப்படியும் கங்கா படத்தை டிசம்பர் மாதம் வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இதற்கிடையில் பாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய பிசாசு படமும் டிசம்பர் மாதம் வெளியிடும் திட்டத்தோடு பட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. பிசாசு படத்தை தனக்கு ராசியான டிசம்பர் மாதம் வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார் பாலா.
பிசாசு படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையைப் பெற்றிருப்பது ராமநாராயணனின் மகன் முரளியின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். பாலாவின் விருப்பப்படி பிசாசு படத்தை டிசம்பரில் வெளியிட ஒப்புக்கொண்டாலும், கங்கா படம் டிசம்பரில் வெளியானால் பிசாசு படத்தை சில வாரங்கள் தள்ளி வைக்க திட்டமிட்டிருக்கிறாராம் முரளி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி