செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித் வழியில்…விஜய்சேதுபதி!…

நடிகர் அஜித் வழியில்…விஜய்சேதுபதி!…

நடிகர் அஜித் வழியில்…விஜய்சேதுபதி!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் சேதுபதி மெல்லிசை, புறம்போக்கு, இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், வன்மம், நானும் ரௌடிதான் என அரைடஜன் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதோடு, மேலும் அரை டஜன் படங்களில் நடிக்க வாய்மொழி உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். இந்த அரைடஜன் படங்களில் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளிவரம் முதல் படம் வன்மம். இப்படம் நவம்பர் 21 அன்று வெளியாக இருக்கிறது.

அறிமுக இயக்குனர் ஜெய் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருக்கிறார். வன்மம் படத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால்….விஜய் சேதுபதி படம் முழுக்க வெள்ளை வேஷ்டி சட்டையுடன்தான் வலம் வருகிறாராம். இந்த வருடப் பொங்கலுக்கு வெளியாகி வெற்றியடைந்த வீரம் படத்தில் அஜித் வெள்ளை வேஷ்டி சட்டையுடன்தான் நடித்திருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி