இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தால் மருதநாயகம் படத்தை எடுத்து முடிப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், படத்திற்கான செலவு 200 கோடிகளைத் தொட்டாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று தமிழிலேயே ஐ மற்றும் லிங்கா ஆகிய படங்கள் 100, 150 கோடிகளில் உருவாக்கப்பட்டுவரும்போது மருதநாயகம் படத்தை உருவாக்க முடியும் என்றே தோன்றுகிறது. அதற்கு முதலில் முதலீட்டைத் திரட்ட வேண்டும். பெரிய நிறுவனங்கள் மனதுவைத்தால் அதை நிறைவேற்றுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அப்படியே, இல்லையென்றாலும் கிரௌட்ஃபண்டிங் என்று அழைக்கப்படும் பொதுமக்களின் முதலீட்டை வைத்து கூட அந்த வரலாற்றுப்படத்தை எடுக்க முடியும்.
தெலுங்கில் பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய சரித்திரப் படங்களை, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும்போது, இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்பெற்று விளங்கும் கமல்ஹாசன் நினைத்தால் மருதநாயகம் படம், மீண்டும் மலரும் வாய்ப்பு உள்ளது. தமிழ் திரைப்பட உலகிலும் பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க முடியும். அதற்கு, கமல்ஹாசன் மனது வைக்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி