துவக்க விழாவில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ரஜினி காந்த் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. மத்திய மந்திரி அருண் ஜெட்லி, நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து வழங்க, ரஜினிகாந்த் விருதினை பெற்றுக்கொண்டார்.
விருதினை பெற்றுக்கொண்ட ரஜினி காந்த், அமிதாப்பின் காலைத் தொட்டு வணங்கினார். பின்னர் பேசிய ரஜினிகாந்த், மத்திய அரசு வழங்கிய இந்த விருதினை தனக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதுவதாகவும், தனது வெற்றிக்கு ஆதரவாக இருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி